மறக்க முடியாத அனுபவம்: ‘துணிந்தபின்’ படம் குறித்து இயக்குநர் சர்ஜுன் பகிர்வு

By செய்திப்பிரிவு

'நவரசா' ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள ‘துணிந்தபின்’ படத்தை இயக்கியது குறித்து இயக்குநர் சர்ஜுன் பகிர்ந்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் ‘துணிந்தபின்’ என்ற படத்தை இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் சர்ஜுன் கூறியதாவது:

''இப்படத்தின் தயாரிப்புக் குழுவினரும், நடிகர்கள் குழுவினரும் படப்பிடிப்பிற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இத்தனை எளிதாக ‘துணிந்தபின்’ பகுதியைப் படம் பிடித்திருக்க முடியாது.

படத்தின் மொத்தப் படப்பிடிப்பும், தென்காசி அருகிலுள்ள அச்சன் கோவில் மலைப்பகுதியில் நடந்தது. படப்பிடிப்புத் தளமே குழுவினர் அனைருக்கும் மிகப்பெரும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்திருந்தது. மொத்தப் படப்பிடிப்பையும் 5 நாட்களில் முடித்து, விட்டுப்போன காட்சிகளை ஒரு நாளில் எடுத்து முடித்துவிட்டோம். இப்படம் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது''.

இவ்வாறு இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்