சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் 'ஏ1'. சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜானசன் கே இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவு பெறும் நிலையில் இருப்பதால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'பாரிஸ் ஜெயராஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

29 mins ago

க்ரைம்

33 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்