விஜய் சேதுபதியின் லுக்கை பாடலாக வெளியிட்ட 'மாஸ்டர்' படக்குழு

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதியின் லுக்கை பாடல் ஒன்றின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது கரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டன. இதில் 'வாத்தி கம்மிங்' என்ற பாடல் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலை வைத்து டிக்-டாக் வீடியோக்கள் செய்து பலரும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள். இதனிடையே, இந்தப் படத்திலிருந்து விஜய் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோருடைய லுக் மட்டுமே வெளியிடப்பட்டது.

இதில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் லுக் வெளியாகாமலேயே இருந்தது. ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதியின் ஒரு பக்கம் முகம் மட்டுமே தெரிவது போல் இருந்தது. அதுவும் படத்தின் புகைப்படம் அல்ல. அது போட்டோ ஷுட். தற்போது விஜய் சேதுபதி படத்தில் என்ன கெட்டப்பில் இருப்பார் என்பதை அவருக்கான 'பொளக்கட்டும் பற பற' என்ற பாடலை வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது படக்குழு.

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவில், விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதியின் கெட்டப் படத்தில் என்னவாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி படத்தில் 'பவானி' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதும் உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

28 mins ago

கருத்துப் பேழை

36 mins ago

இந்தியா

42 mins ago

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

48 mins ago

மேலும்