பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் கை கோத்த சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் கை கோத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்த முறை இந்தியாவில் இந்தப் போட்டிகளை விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆகையால், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி 'கனா' படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரி சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பெண்கள் உலகப் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் #LedByWomen மற்றும் #LetsMakeHerstory ஆகிய இரண்டு ஹேஷ்டேகுகளுக்கும் சிவகார்த்திகேயன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

அதில், "இதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த முறை அதுவும் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 'கனா' என்ற படத்தைத் தயாரித்ததே, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துதான்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் தனிப்பட்ட அணிக்கு சப்போர்ட் பண்ணுவதை விட, அனைத்துப் பெண்களுக்கும் சப்போர்ட் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக ஆஸ்திரேலியத் தூதரகம் இதற்காக பெரிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. #LedByWomen மற்றும் #LetsMakeHerstory ஆகிய இரண்டு வார்த்தைகளைப் படிக்கும் போதே உத்வேகம் அளிக்கிறது.

இந்தப் போட்டியில் விளையாடும் அனைத்துப் பெண்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என நம்புகிறேன்" என்று பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது 'அயலான்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கோவாவில் தொடங்கும் 'டாக்டர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

தவறவிடாதீர்

மீம் விமர்சனம்- நான் சிரித்தால்

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை, விஜய் சேதுபதி மதமாற்ற சர்ச்சை குறித்து சீமான் கருத்து

முதல் பார்வை: நான் சிரித்தால்

சுந்தர்.சி படத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

51 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்