சுந்தர்.சி படத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

சுந்தர்.சி படத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்
Updated on
1 min read

சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை 3’ படத்தில், ஒரு ஹீரோயினாக சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஆக்‌ஷன்’. விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இந்தப் படத்துக்கும் முன்பாக சுந்தர்.சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படமும் வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், தனது வழக்கமான காமெடி பாணிக்குத் திரும்பியுள்ளார் சுந்தர்.சி.

தற்போது ‘அரண்மனை 3’ படத்துக்கான ஆரம்பகட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

‘அரண்மனை’ சீரிஸைப் பொறுத்தவரை, 3 ஹீரோயின்களை நடிக்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சுந்தர்.சி. ‘அரண்மனை’ படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி மூவரும் ஹீரோயின்களாக நடித்தனர். ‘அரண்மனை 2’ படத்தில் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா மூவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.

எனவே, ‘அரண்மனை 3’ படத்தில் நடிக்கும் மூன்றாவது ஹீரோயின் யார் என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில், சாக்‌ஷி அகர்வால்தான் அந்த ஹீரோயின் எனத் தகவல் வெளியானது. ‘காலா’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால், ‘பிக் பாஸ் 3’ போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வருகிற 20-ம் தேதி முதல் குஜராத் அருகிலுள்ள ராஜ்கோட்டில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in