எஸ்.பி.ஜனநாதனின் 'லாபம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'லாபம்'. ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இந்தப் படத்தில் உணவு அரசியல் உள்ளிட்ட புரட்சிகரமான விஷயங்களும் பேசப்பட்டுள்ளது.

'லாபம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் காவல்துறையினர் மக்களைச் சுடுவது போன்று வடிவமைத்துள்ளனர். இதற்கு சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் ஜனநாதன், "இங்குச் சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

39 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்