'நேர்கொண்ட பார்வை' விநியோக உரிமை யாருக்கு? - போனி கபூர் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

'நேர்கொண்ட பார்வை' தமிழக உரிமை யாருக்கு என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கைப் பணிகள் முடிந்து, தற்போது க்யூபுக்கு அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 8-ம் தேதி நெருங்கும் வேளையில் யாருக்கு தமிழக விநியோக உரிமை என்பதில் குழப்பம் நீடித்தது.

ஜெமினிக்குத் தான் உரிமை என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனைப் பொய்யாக்கும் விதமாக தற்போது 'நேர்கொண்ட பார்வை' உரிமை யாருக்கு என்பதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் போனி கபூர்.

அதில், “அஜித்துடன் எங்கள் பெருமைக்குரிய தயாரிப்பான 'நேர்கொண்ட பார்வை' படத்தை தமிழகத்தில் எஸ் பிக்சர்ஸ் ஜி.ஸ்ரீனிவாசன், கந்தஸ்வாமி ஆர்ட்ஸ் கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து வெளியிடுவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார் போனி கபூர். இந்த அறிவிப்பால் விநியோகத்தில் நிலவி வந்த அனைத்து குழப்பங்களும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த மாற்றம் தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, "போனி கபூர் டிஸ்ட்ரிபூஷன் அடிப்படையில் தான் படத்தைக் கொடுத்துள்ளார். அதற்கு அட்வான்ஸ் தொகை மட்டும் வாங்கியுள்ளார். அந்தப் படத்தின் லாபம் மற்றும் நஷ்டம் அனைத்துமே போனி கபூரையே சேரும். கிட்டதட்ட அவரே சொந்தமாக வெளியிடுவது போலத் தான்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

வாழ்வியல்

21 mins ago

தமிழகம்

37 mins ago

கருத்துப் பேழை

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்