தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி: தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்றுள்ளார்.

2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில் ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், 4 இணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிட விண்ணப்பம் வழங் கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் வாக்களித்தனர்.

1.503 வாக்குகள் பதிவு

மொத்தமாக 3 ஆயிரம் உறுப் பினர்களைக் கொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தில் 2,400 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். நேற்று நடந்த தேர்தலில் 1,503 வாக்குகள் பதிவாகின.

தலைவர் பதவிக்கு போட்டி யிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். அவரை எதிர்த்து போட்டி யிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்றுள்ளார்.

போட்டியின்றி தேர்வு

முன்னதாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்த பாரதிராஜா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அமீர் தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுவதாக அறிவித்தனர். அந்த அணியினரின் வேட்புமனு முன்மொழிதல், வழி மொழிதல் ஆகியவற்றில் குளறுபடி இருப்பதாக அமீர், எஸ்.பி.ஜன நாதன் ஆகியோரின் வேட்புமனுக் களை தேர்தல் அதிகாரி நிராகரித் தார்.

இதையடுத்து, போட்டியில் இருந்து அமீர் அணியினர் விலகினர். இதனால், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட் டனர். துணைத் தலைவர் தேர்தலில் கே.எஸ்.ரவிக்குமார் 1,289 வாக்கு களும், மற்றொரு வேட்பாளரான ரவி மரியா 1,077 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

51 mins ago

க்ரைம்

55 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்