நிவின் பாலி நடிப்பில் புதிய படம்: சி.வி.குமார் திட்டம்

By ஸ்கிரீனன்

நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற படம் 'பிரேமம்'. சென்னையிலும் இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'நேரம்' என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே வெளியானது.

'பிரேமம்' படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து நிவின் பாலியை நாயகனாக வைத்து படம் தயாரிக்க பல்வேறு தமிழ் இயக்குநர்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நலன் குமாரசாமி, கார்த்தி சுப்புராஜ் ஆகியோர் இயக்கும் படங்களைத் தயாரித்து வரும் சி.வி.குமார் அப்படங்களைத் தொடர்ந்து நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். அக்டோபர் மாதம் இப்படத்தின் பணிகள் துவங்க இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

12 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

36 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

மேலும்