ரூ.30 கோடியில் புதிய படம்: லிங்குசாமிக்கு உதவ கமல் திட்டம்

By ஸ்கிரீனன்

கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு உதவும் நோக்கில் 30 கோடியில் ஒரு படத்தை முடித்து தர கமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். முதல் பிரதி அடிப்படையில் கமல் உருவாக்கி இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடன் பிரச்சினையில் சிக்கியதால் 'உத்தம வில்லன்' திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. மே 1ம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம், 2ம் தேதி மதிய காட்சியில் இருந்தே வெளியானது.

அக்கடன் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமலின் உதவியை நாடியது.

அதன்படி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, முதல் பிரதி அடிப்படையில் 30 கோடியில் ஒரு படத்தை முடித்து தர சம்மதம் தெரிவித்திருக்கிறார் கமல். அப்படத்தின் அனைத்து உரிமைகளையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கே எழுதிக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், 'உத்தம வில்லன்' படத்தின் வெளிநாட்டு உரிமை கமலிடம் தான் இருக்கிறது.

30 கோடி பட்ஜெட் படத்தை 4 மாதங்களில் முடித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படம் எப்போது ஆரம்பிக்கும், யாரெல்லாம் நடிக்கிறார், யார் இயக்குநர் என்பது இன்னும் முடிவாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்