தற்கொலை செய்து கொண்ட 125 விவசாய குடும்பங்களுக்கு தனுஷ் நிதியுதவி

By ஸ்கிரீனன்

தற்கொலை செய்து கொண்ட சுமார் 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார் தனுஷ்.

சமீபத்தில் ராஜீவ் காந்தி 'கொலை விளையும் நிலம்' படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்தார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார்.

தமிழகத்தில் விவசாயிகளின் துயரம், தொடர் தற்கொலைகள் உள்ளிட்டவற்றை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 25 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

ஆனால், செய்வதைப் பெரிதாக செய்யலாம் என்று 50 ஆயிரமாக வழங்க முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் தகவல்களை திரட்டி, அவர்கள் அனைவரையும் தனுஷுன் சொந்த ஊருக்கு வரவைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 50 ஆயிரமாக வழங்கி, அவர்கள் அனைவரது போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிகழ்ச்சியில் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

'கொலை விளையும் நிலம்' ஆவணப்படம் முழுமையாக விவசாயிகளின் தற்கொலை மற்றும் அவர்களுடைய குடும்பப் பின்புலத்தைக் கொண்டு ராஜீவ் காந்தி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

தமிழகம்

22 mins ago

கருத்துப் பேழை

44 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

52 mins ago

உலகம்

59 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

மேலும்