DEVI(L) அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் பாரா கான்

By ஸ்கிரீனன்

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் 'DEVI(L)' படத்தில் கவுரவ தோற்றத்தில் பாரா கான் நடித்திருக்கிறார்.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் உருவாகி வரும் படம் 'DEVI(L)'. இப்படத்துக்கு ஹாலிவுட் கதாசிரியர் பவுல் ஆரோன் விஜய்யுடன் இணைந்து கதை எழுதியிருக்கிறார். இப்படத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் விஜய், "பிரபு தேவா, தமன்னா, பவுல் ஆரோன், பாரா கான் மற்றும் சோனு சூட். இதை விட ஒரு இயக்குனருக்கு வேற என்ன வேண்டும்? இந்த மாபெரும் நட்சத்திர கூட்டணியில் நான் பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.

பொதுவாகவே திகில் படமென்றால் இப்படி தான் இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. ஆனால் DEVI(L) திரைப்படம் அப்படி இல்லாமல் மக்களின் ரசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் முழுவதும் பூர்த்தி செய்யும் வண்ணமாக செதுக்கப்பட்டு வருகிறது.

படத்தின் ஒரு காட்சிக்கு, நடன கலைஞராக நடிக்கும் கதாப்பாத்திரம் தேவைப்பட்டது. பாரா கானை தவிர வேறு யார் அந்த வேடத்தை மிக எதார்த்தமாக நடிப்பது? எனவே அவரையே அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வேலை வாய்ப்பு

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்