ஜுன் 16ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் - பொன்.ராம் படப்பிடிப்பு துவக்கம்

By ஸ்கிரீனன்

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜுன் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மோகன்.ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து முடிந்துள்ளது படக்குழு. ஜுன் 16ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதற்காக 3 பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இப்படத்துக்காக சிலம்ப பயிற்சி எல்லாம் கற்று நடிக்க தயாராகியுள்ளார் சமந்தா. முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் பொன்.ராம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

கருத்துப் பேழை

23 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்