நவம்பர் மாதம் வெளியாகிறது 2.0 பர்ஸ்ட் லுக்

By ஸ்கிரீனன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது அமெரிக்காவில் சென்னை திரும்பியிருக்கும் ரஜினி, விரைவில் தொடங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். அதில் ரஜினி - அக்‌ஷய்குமார் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.

அடுத்தாண்டில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் - லுக் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இன்று (ஆகஸ்ட் 17) ஷங்கர் பிறந்த நாளை முன்னிட்டு, லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் "நவம்பர் 2016ல் '2.0' பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்