விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி - சாயிஷா சைகல்

By ஸ்கிரீனன்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயம் ரவி - சாயிஷா சைகல் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

பிரபுதேவா, தமன்னா, சோனு உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தேவி' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய். அக்டோபர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் விஜய். இப்படத்தை தனது 'தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்' நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் இருக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் பூஜை விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இப்படத்தின் நாயகி சாயிஷா சைகல், இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் பேத்தியாவார். தெலுங்கில் நாகார்ஜூனின் இளைய மகன் அகில் நடித்த 'அகில்' படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர்.

மேலும், அஜய் தேவ்கான் இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் 'ஷிவ்வே' படத்திலும் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படமாக விஜய் - ஜெயம் ரவி படம் அமைந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

வாழ்வியல்

28 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்