அஜித்தோடு ஜோடி சேரும் அனுஷ்கா

By ஸ்கிரீனன்

கெளதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்திற்கு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'வீரம்' படத்தினைத் தொடர்ந்து அஜித், கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை 'ஆரம்பம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. அஜித்தைத் தொடர்ந்து படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், படத்தின் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இத்தகவலை கெளதம் மேனனின் தயாரிப்பு நிறுவனமான போட்டான் கதாஸ் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

" அனுஷ்கா முதல்முறையாக அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தில் நடிக்கவிருக்கிறார்" என்று அந்த ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அஜித்தோடு அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேரவிருப்பதால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்