சிவகார்த்திகேயன் மீது கோபப்பட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கிண்டல் செய்வதுபோல் பாடல் வைத்ததால் சிவகார்த்திகேயன் மீது கோபப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் - லவ்லின் இருவரும் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவர்களின் வயதான பாத்திரங்களில் கிஷோர் - ஸ்ரீரஞ்சனி இருவரும் நடித்துள்ளனர். இன்று (ஜூன் 28) இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது.

‘ரஜினி முருகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ பாடலால், சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் அவர் சொல்லும் டயலாக் அது என்பதால் இந்தக் கோபம்.

இந்நிலையில், ‘ஹவுஸ் ஓனர்’ படம் குறித்து இந்து தமிழுக்கு வீடியோ பேட்டி அளித்த லட்சுமி ராமகிருஷ்ணனிடம், சிவகார்த்திகேயன் குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “சிவகார்த்திகேயன் அந்தப் பாட்டைப் பாடியபோது நான் கோபப்பட்டேன். ஏனென்றால், என்கூட இருந்த பையன் சிவகார்த்திகேயன். இப்போ அவர் பெரிய ஆள், அதனால் நான் என் வாயைத் திறக்கவில்லை. அவன் அவ்வளவு பெரிய இடத்துக்கு வந்துட்டான். அவனைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.

‘அம்மா... அம்மா...’ எனக் கூப்பிட்டு, பக்கத்தில் உட்கார்ந்து என்னுடன் பேசிய பையன். எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். எனவே, நான் அவனைப் பற்றிச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், நான் விளம்பரத்துக்காகச் சொன்னதுபோல் ஆகிவிடும். ரொம்பத் திறமைசாலி. அவன் அப்படி இருக்கிறான் என்றால், அதற்குக் காரணம் அவனுடைய திறமை மட்டும்தான். அதில் சந்தேகமே கிடையாது.

ஆனால், அப்படி இருந்த பையன் அந்தப் பக்கம் போனதும் என்னைக் கிண்டல் பண்ணி ஒரு பாடல் பாடினால், ‘அம்மா... உங்களைப் பற்றி ஒரு பாடல் பாடியிருக்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க’னு சொல்வான் என எதிர்பார்த்தேன். ஆனால், அணுகுமுறை மாறியதால் எனக்கு வேதனையானது. பிறகு, அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். சின்னப்பையன், அவன் நல்லாருக்கட்டும்னு விட்டுட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

வாழ்வியல்

10 mins ago

தமிழகம்

26 mins ago

கருத்துப் பேழை

48 mins ago

விளையாட்டு

52 mins ago

இந்தியா

56 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்