சூரிக்கு எச்சரிக்கை விடுத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

காமெடி நடிகர் சூரிக்கு எதிராக விஜய் சேதுபதி ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஹரி இயக்கத்தில் நேற்று (செப்டம்பர் 22) வெளியான படம் ‘சாமி ஸ்கொயர்’. விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பாபி சிம்ஹா, பிரபு, சூரி, ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஓணாபதியா இருந்தா என்ன, அம்பிகாபதியா இருந்தா என்ன... ஏன், விஜய் சேதுபதியா இருந்தா என்ன... இன்னைக்கு விடமாட்டேன்’ என்று சொல்லியபடி சூரி ஒருவரை அடிக்கும் காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்கு, விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

''திரைப்பட நடிகர் சூரிக்கு வேண்டுகோள். ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி பெயரைச் சொல்லி மற்றவர்களை அடிக்கும் காட்சி உள்ளது. திரையில் வேண்டுமானால் நீ அவரை அடிக்கும் காட்சிகள் வைக்கலாம். ஆனால், நிஜத்தில் நீ அவர் நிழல் உயரம் கூட வரமாட்டாய்.

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் வரும் அந்தக் காட்சியை நீக்கு. இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சூரிக்கு இது எச்சரிக்கை. இவண்: விஜய் சேதுபதி ரசிகர்கள்'' என போஸ்டர் அடித்துள்ளனர் விஜய் சேதுபதி ரசிகர்கள். இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 mins ago

விளையாட்டு

11 mins ago

இந்தியா

15 mins ago

உலகம்

22 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்