‘96’ படத்தின் தொடர்ச்சிதான் ‘பேட்ட’: ஜாலியாக உலாவரும் மீம்

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் நடித்த 96 திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு படத்தின் கதாபாத்திரப் பெயர்கள், ரசிகர்களின் மனதில் தங்கியது, இந்தப் படம் மூலமாகத்தான்!

விஜய் சேதுபதியின் பெயர் ராம். த்ரிஷாவின் பெயர் ஜானு. ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பெயரை மறக்கவே மாட்டார்கள். ரசிகர்களை விடுங்கள். விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் கூட இன்னும் மறக்கவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதின் சித்திக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி பேசும்போது, ‘ரஜினி சார்... இது என் ஜானு சார்’ என்றார். அரங்கம் அதிரக் கைத்தட்டியது.

அதேபோல், த்ரிஷா பேசும் போது, எல்லோரின் பெயரைச் சொல்லி நன்றி தெரிவித்தார். அப்போது விஜய் சேதுபதியை ராம் என்றே அழைத்து நன்றி சொன்னார் த்ரிஷா. போகிற போக்கில் சொல்லப்பட்டாலும் அதையும் கண்டு உணர்ந்த ரசிகர்கள், விசில் பறக்கவிட்டார்கள்.

இந்த நிலையில், 96 படத்தையும், பேட்ட படத்தையும் இணைத்து மீம் ஒன்று ஜாலியாக உலா வந்துகொண்டிருக்கிறது. அதை த்ரிஷாவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதாவது ராமும் ஜானுவும் காதலிக்கிறார்கள். ஆனால், சேர முடியாமல் பிரிந்துவிடுகிறார்கள். அதன்பிறகு பேட்ட ரஜினியும் த்ரிஷாவும் சேருகிறார்கள். இதைக் கண்டு கொந்தளித்துப் போகும் விஜய் சேதுபதி, அதுவரை சாதுவாக இருந்தவர், இப்போது துப்பாக்கியைத் தூக்கிவிடுகிறார் என்று படங்கள் வைத்து பாகம் குறிப்பது போல் ‘கதை’ விட்டிருக்கிறார்கள்.

இந்த செம கலாய் மீம்ஸை ரஜினி, விஜய் சேதுபதி, த்ரிஷாவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ரசித்துப் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

க்ரைம்

7 mins ago

சுற்றுச்சூழல்

43 mins ago

க்ரைம்

47 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்