விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’: ஜூலை 27-ம் தேதி ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜுங்கா’, வருகிற 27-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - கோகுல் இணைந்திருக்கும் படம் ‘ஜுங்கா’. இந்தப் படத்தில் கஞ்சனமான நபராக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. வடசென்னையில் இருந்து சூழ்நிலை காரணமாக பாரிஸ் செல்லும் விஜய் சேதுபதி, ‘டானாக’ உருமாறுகிறார். அதன்பிறகும் தன் கஞ்சத்தனத்தை அவர் மாற்றிக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் இதன் கதை.

விஜய் சேதுபதி ஜோடியாக சயிஷா, மடோனா செபாஸ்டியன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். யோகிபாபு, ராதாரவி, சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம். பெரும்பாலானக் காட்சிகளைப் பாரிஸில் படமாக்கியிருக்கின்றனர். எனவே, இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படமான இதை, நடிகர் அருண் பாண்டியன் வெளியிடுகிறார்.

உலகம் முழுவதும் வருகிற 27-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்