“பிக் பாஸ் ஜூலிக்கு ஈடு இணையில்லை” - சதீஷ்

By செய்திப்பிரிவு

‘பிக் பாஸ் ஜூலிக்கு ஈடு இணையில்லை’ என்று தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, நேற்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த், அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம், மும்தாஜ், மமதா சாரி, ஜனனி, வைஷ்ணவி, மஹத், பாலாஜி, நித்யா, டேனியல், சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, என்.எஸ்.கே.ரம்யா, ரித்விகா, ஷாரிக் ஹாசன் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் ஓவியாவும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

சீஸன் 2-வில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களையும், சீஸன் 1-ல் கலந்துகொண்ட போட்டியாளர்களையும் ஒப்பிட்டுப் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். பெரும்பாலும் கடந்த சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் குணநலன் கொண்ட இந்த சீஸன் போட்டியாளர்கள் யார் யார் என ஒப்பிட்டு வருகின்றனர்.

நடிகர் சதீஷும் அவ்வாறு சிலரை ஒப்பிட்டுள்ளார். “சென்றாயன் பரணி, ஷாரிக் - ஆரவ், மஹத் - ஹரிஷ் கல்யாண், பாலாஜி - வையாபுரி, பொன்னம்பலம் - கஞ்சா கருப்பு, யாஷிகா - ரைஸா, நமிதா - மும்தாஜ், அனந்த் வைத்யநாதன் - சினேகன், ஓவியா - ஓவியா, ஜூலி - ஈடு இணையே இல்லை” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சதீஷ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்