குப்பைக் கதை அல்ல; குடும்பக் கதை

By செய்திப்பிரிவு

குப்பைக் கழிவுகளை அகற்றுபவர்களைப் பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது ‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படம். நாயகன் தினேஷ், குப்பை அகற்றும் தொழிலாளி. இதை மறைத்து நாயகி மனிஷாவை திருமணம் செய்துகொள்கிறார். குழந்தை பிறக்கும் நேரத்தில், உண்மை தெரியவர இருவரும் பிரிகின்றனர். இவ்வாறு கதை நகர்கிறது. பட அனுபவம் குறித்து நாயகி மனிஷா கூறும்போது, ‘‘தினசரி குடும்ப வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இப்படம். மாஸ்டர் தினேஷ் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்த படம் இது. படத்தில் நான் ஒரு சிறு பெண் தான். இருந்தாலும் திருமண வாழ்க்கைக்குப் பிறகு மாறும் என் வாழ்க்கை எந்த விதத்தில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்கிற சஸ்பென்ஸ் திரில்லிங்காக இருக்கும். தினத் தொழிலாளியின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்கிற பிரதிபலிப்பை படம் அழகாக காட்டியுள்ளது. இது எனக்கு முக்கிய படம்’’ என்கிறார் மனிஷா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்