‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ - கவிஞர் வைரமுத்து கோரிக்கை

By செய்திப்பிரிவு

‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ என கோரிக்கை விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்துள்ள கவிஞர் வைரமுத்து, “பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறது காவல்துறை. அச்சப்பட வேண்டியது அரசாங்கமல்லவோ? தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகப் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். ‘சட்டம், ஒழுங்கைக் காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ‘சர்வாதிகார தமிழக அரசு’ என டிடிவி தினகரனும், ‘தமிழினம் இதை ஒருபோதும் வேடிக்கைப் பார்க்காது’ என இயக்குநர் வ.கவுதமனும் தெரிவித்துள்ளனர்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

தமிழினம் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது: ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதான வ.கவுதமன் பேட்டி

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலி; சட்டம் ஒழுங்கை காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்

அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: சர்வாதிகார தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 mins ago

விளையாட்டு

14 mins ago

இந்தியா

18 mins ago

உலகம்

25 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்