யு-டர்ன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா

By ஐஏஎன்எஸ்

'யு-டர்ன்' கன்னட படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பதிப்புகளில் சமந்தா நடிக்கிறார்.

தமிழில் 'விக்ரம் வேதா', 'இவன் தந்திரன்' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு கன்னடத்தில் புகழை பெற்று தனத படம் 'யு-டர்ன்'. 2016ல் வெளியான இந்த த்ரில்லரை 'லூசியா' இயக்குநர் பவன் குமார் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் ரீமேக் பற்றி நீண்ட நாட்களாகவே பல்வேறு விதமான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது இதில் சமந்தா நடிப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்த சமந்தா, "2018. நான் கேட்டது அனைத்தும் கிடைத்துள்ளது. யு-டர்ன் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக், பவன் இயக்கத்தில் பிப்ரவரி படப்பிடிப்பு துவங்குகிறது. என்றும் உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியே இந்த படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

42 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்