அர்ஜுன் ரெட்டி ரீமேக்: ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் ரீமேக்கிற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கு இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. 'நாச்சியார்' படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே, 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார் பாலா.

நாயகி கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதன் ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் நடித்து வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்து வருகிறார். அவருடைய பணி மிகவும் பிடித்துவிடவே, பாலாவிடம் சுகுமாரை சிபாரிசு செய்திருக்கிறார் விக்ரம்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், பின்னர் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வசூல் ரீதியாக பெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்