மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்

By கா.இசக்கி முத்து

கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.வெளிநாட்டில் இருந்து த்ரிஷா திரும்பிய உடன், அஜித் படத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறார். அஜித்தின் காதலியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். அதற்கு முன் தனது காலில் ஏற்பட்ட அடிக்கு ஆபிரேஷன் செய்து கொள்ள இருக்கிறார். அதற்கு பிறகு தான் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் முடிந்தவுடன் இயக்குநர் சிவா, இந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் அஜித் வேடத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

33 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்