'லூசிஃபர்' ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா?

By செய்திப்பிரிவு

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். மோகன் ராஜா இயக்கவுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். 'லூசிஃபர்' கதையைத் தெலுங்கிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

'லூசிஃபர்' படத்தில் அதிகமான கதாபாத்திரங்கள் இருக்கும் என்பதால், அதற்கான நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான 'தனி ஒருவன்' மற்றும் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த நட்பை வைத்து நயன்தாராவிடம் பேசியுள்ளார் மோகன் ராஜா. மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தைப் படம் முழுக்க வருவது போன்று மாற்றியமைத்து, விரைவில் நயன்தாராவிடம் கதை சொல்லவுள்ளார். அதனைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

விரைவில் இந்தப் படத்தின் பூஜையைப் பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2001-ம் ஆண்டு 'ஹனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. அதற்குப் பிறகு எந்தவொரு தெலுங்குப் படத்தையும் மோகன் ராஜா இயக்கவில்லை. சுமார் 20 ஆண்டுகள் கழித்து, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

வர்த்தக உலகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

43 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்