யூடியூப்பில் புதிய மைல்கல்லைத் தொட்ட 'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்கள்

By செய்திப்பிரிவு

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடல்கள் யூடியூப் தளத்தில் புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’. குடும்ப உறவுகள், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என தரமான பொழுதுபோக்குப் படமாகப் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.

இந்தப் படம் வெளியாகும் முன்னரே தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்களும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் படத்தின் பாடல்கள் பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிகம் கேட்கப்படும் பாடல்களாக முன்னணியில் இடம் பெற்றன.

சில தினங்களுக்கு முன்னால், இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களையும் சேர்த்து 1 பில்லியனுக்கும் (100 கோடிக்கும்) அதிகமான முறை கேட்கப்பட்டு சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. தற்போது யூடியூப் பக்கத்தில் 'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்கள் இசை வடிவம் மற்றும் வீடியோ வடிவம் என அனைத்தும் சேர்த்தும் 100 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் ஒரு படத்தின் பாடல்கள் யூடியூப் தளத்தில் இந்தளவுக்கு வரவேற்புப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். இது தொடர்பாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்