எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தின் தலைப்பு ‘ராம ராவண ராஜ்யம்’?

By செய்திப்பிரிவு

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் கதை விவாதம் மற்றும் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் ராஜமெளலி. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். என்ற இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை இணைத்து இயக்கப் போவதாக முதலில் அறிவித்தார்.

இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கியது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதனை உறுதிப்படுத்தினார் ராஜமெளலி.

கதை விஜயேந்திர பிரசாத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், கிராபிக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி, வசனம் சாய் மாதவ் புரா - கார்க்கி, திரைக்கதை மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்று படத்தின் தொழில்நுட்பக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமெளலியின் முதல் எழுத்தைச் சேர்த்து இப்படி அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியட் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இப்படத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

16 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்