பேபி 2 2019ல், அடுத்த வருடம் க்ராக்: நீரஜ் பாண்டே அறிவிப்பு

By பிடிஐ

 

2015ல் வெளியாகி ஹிட் ஆன 'பேபி' படத்தின் இரண்டாம் பாகம் 2019ஆம் ஆண்டு வெளியாகும் என்றும், தனது அடுத்த படம் 'க்ராக்' அடுத்த வருடம் துவங்கும் என்றும் இயக்குநர் நீரஜ் பாண்டே அறிவித்துள்ளார்.

பேபி படத்தின் ஒரு கதாபாத்திரத்தை வைத்து, சில மாதங்களுக்கு முன்பு, நாம் ஷபானா என்ற படம் வெளியானது. தாப்ஸி இதில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

"'பேபி' உலகை விரிவுபடுத்த திட்டங்கள் இருக்கின்றன. இரண்டாம் பாகம் 2019ல் வெளியாகும் என நம்புகிறேன். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும். க்ராக் படத்தின் திட்டமிடல் தான் இன்னும் நடந்து வருகிறது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்காது. அய்யாரி படத்தின் வேலைகள் முடியவே அக்டோபர் மாதம் ஆகிவிடும். அதனால், அடுத்த படத்தை உடனடியாக தொடங்க முடியாது. இன்னும் திரைக்கதை இறுதிசெய்யப்படவில்லை. அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என நம்புகிறேன்" என நீரஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம், க்ராக் படம் குறித்து இயக்குநர் அக்‌ஷய்குமார் அறிவித்திருந்தார். இந்த வருடம் சுதந்திர தினத்துக்கு அந்தப் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல காரணங்களால் படம் தாமதமாகியுள்ளது.

"சில நேரங்களில் நம் வேலை அட்டவணைக்கு சரியாக ஒத்து வராது. வேறு பல காரணங்களும் இருக்கலாம். படம் தொடங்கப்பட வேண்டிய நேரத்தில் தொடங்கப்படவில்லை என்பதால் நான் அய்யாரி பட வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். அவ்வளவுதான்" என்று பாண்டே கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டு, எ வெட்னஸ்டே படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக முத்திரை பதித்தவர் நீரஜ் பாண்டே. இந்தப் படம், உன்னைப் போல் ஒருவன் என, கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

வேலை வாய்ப்பு

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்