நகைச்சுவை திகில் படத்தில் கத்ரீனா கைஃப்

By ஐஏஎன்எஸ்

'போன் பூத்' என்ற பெயரில் உருவாகும் நகைச்சுவை, திகில் படத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் கத்ரீனா கைஃப். அன்றைய தினம் ஒட்டுமொத்த இந்தி திரையுலகமுமே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது. இன்று (ஜூலை 20) அவருடைய புதிய படம் ஒன்றைப் படக்குழு அறிவித்துள்ளது.

'போன் பூத்' என்ற பெயரில் உருவாகும் நகைச்சுவை, திகில் படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, இஷான் கட்டர் ஆகியோருடன் நடிக்க கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2021-ம் ஆண்டு வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் ரிதேஷ் சித்வானி மற்றும் ஃபர்ஹான் அக்தரால் தயாரிக்கப்படுகிறது. குர்மீத் சிங் இதை இயக்க, ரவி சங்கரன் மற்றும் ஜஸ்விந்தர் சிங் பாத் இதற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

"பயப்பட அனுமதி உண்டு, ஆனால் அதோடு நீங்கள் சிரிக்கும் வரை. 'போன்பூத்', 2021-ம் ஆண்டு உங்கள் அருகிலுள்ள திரையரங்கில்" என்று படத்தைத் தயாரிக்கும் எக்ஸல் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் படத்தின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது ஊரடங்குக்கு முன் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை கத்ரீனா கைஃபும் இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வருடக் கடைசியில் படப்பிடிப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

23 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

25 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்