‘லாஜிக் எதிர்பார்த்தால் ஏமாற வேண்டியதுதான்!’- ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ நாயகன் சந்திரன் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சந்திப்பு: மகராசன் மோகன்

‘டாவு’, ‘நான் செய்த குறும்பு’ ஆகிய படங்களின் படப் பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் ‘கயல்’ சந்திரன் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. கிரிக்கெட் உலகக் கோப் பையைத் திருட முயற்சிக்கும் 5 நபர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை கலகலப்பாக பிரதிபலிக்கும் களம். இந்தத் திரைப்படத்தின் அனுபவங்கள் குறித்து ‘கயல்’ சந்திரனிடம் பேசியதில் இருந்து:

வங்கிக் கொள்ளை, நகைத் திருட்டு என சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துவரும் சூழலில் எதற்காக கிரிக்கெட் உலகக் கோப்பையைத் திருடப் போகிறீர்கள்?

நீங்க சொல்ற வங்கிக் கொள்ளை, நகைத் திருட்டு, பண மோசடி உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் பல படங்களில் பார்த் திருப்போம். இன்னமும் தொடர்ந்து பார்க்கவும் செய்வோம். ஆனால், ஒரு உலகக் கோப்பையைத் திருட ஒரு கும்பல் திட்டம் போடுறதை கேள்விப்பட்டிருப்போமா, இல்லையே. அதனாலதான் இந்தக் களம். ரொம்பப் புதுசா இருக்கும். இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நடக்கும்போது அதை 5 பேர் சேர்ந்து திருட முயற்
சிக்கிறாங்க. அதை காமெடியாக சொல்றதுதான் இந்தப் படம்.

உலகக் கோப்பையை அவ்வளவு எளிதாகத் திருடிவிட முடியுமா? அதுக்கு எந்த மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

படத்தோட டைட்டில் கார்டு முன்பு புகைப்பிடித்தல் உயிரைக் கொல்லும் என வந்த அடுத்த விநாடியே இந்தப் படத்துல லாஜிக் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லியிருக்கோம். அதனால் உலகக் கோப்பையைத் திருடும் போதும் எந்தவிதமான லாஜிக்கும் இருக்காது. கலகலப்பா காமெடியாக கதை நகரும். 5 பேர் சேர்ந்து ஒரு உலகக் கோப்பையைத் திருட மொக்கையா திட்டம் போடுறாங்க. கடைசியில மொக்கையும் வாங்குறாங்க. அவ்ளோதான். ஃபேண்டஸியாக ஒரு விஷயம் செய்யலாம்னு தொட்ட களம்தான் இது.

படங்களில் பார்க்கும்போது நீங்கள் அமைதியான பேர்வழி. பார்த்திபன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்
பவர். இருவருக்கும் இந்தப் படத்தில் எப்படி ஒன்றிப்போனது?

இந்தப் படத்தில் பார்த்திபன் எனக்கு சித்தப்பா. ஷூட்டிங் இல்லாத நேரத்துல நாங்க எல்லையே இல்லாத அளவுக்கு பேசிப்போம். அந்த கெமிஸ்ட்ரி எல்லாம் சினிமாவுக்குள்ள காட்சிகளில் வந்திருக்கான்னு படம் பார்க்குறவங்கதான் சொல்லணும். எப்பவுமே அவரோட காமெடி தனி. அதுவும் அவரோட ஒன் லைனர் வசனங்களை இன்னைக்கு பலரும் மீம்ஸா யூஸ் பண்றாங்க. அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் நாயகிக்கு என்ன வேலை?

’பிச்சைக்காரன்’ பட நாயகி சாத்னா டைடஸ் இதுல நாயகியா வர்றாங்க. ரொமான்ஸ் எதுவும் இருக்காது. நாங்களே லாஜிக் எதுவும் வைக்காம ஒரு படத்தை எடுத்திருக்கோம். அதில் காதல், டூயட்னா சரி வருமா? அதனாலதான் விட்டுட்டோம். எங்க திருட்டுக்கு அவங்களோட பங்களிப்பு என்ன என்பதுதான் அவங்களைச் சுற்றி நடக்கும் சம்பவம். அதுவும் ஒருவிதமான ஜாலியாக இருக்கும்.

நீங்கள் நடித்த ‘பார்ட்டி’ திரைப்படம் எப்போ ரிலீஸ்?

அதுக்கான வேலைகள் நடந்துகிட்டே இருக்கு. புத்தாண்டு இரவில் நடக்குற கதைக் களம். இந்த டிசம்பர் கடைசியில படத் தைக் கொண்டு வந்தா சரியா இருக்கும்னு தயாரிப்புக் குழு திட்டமிட்டு இருக்காங்க. சீக்கிரமே அறிவிப்பு இருக்கும்.

கயல் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்குமா?

பிரபு சாலமன் சார் இப்போது ’கும்கி 2’-ல் பிஸியாக இருக்கிறார். ’மைனா’, ’கும்கி’ மாதிரி இல்லாமல் கயல் படத்தோட கிளைமேக்ஸுல நாயகன், நாயகி சேர்ந்துடுவாங்க. அதனாலயே 2-ம் பாகம் நிச்சயம் யோசிக்கலாம். அதை பிரபு சாலமன் சார்தான் சொல்லணும்.

உங்களது அடுத்த திட்டம் என்ன?

இப்போ ராம்பாலா இயக்கத்தில் ‘டாவு’ படத்தோட படப்பிடிப்பில் இருக்கேன். அடுத்து ‘நான் செய்த குறும்பு’ பட வேலைகள் இருக்கு. ஒவ்வொரு படமாக நிதானமாக தொடரலாம் என ஓடிக் கொண்டிருக்கிறேன்.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்