சென்னை பட விழா | ஐனாக்ஸ்-3 | ஜன.6 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.6) ஐனாக்ஸ் ஸ்கிரீன் 3-ல் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை >>

காலை 10.15 மணி | AS I OPEN MY EYES | A PEINE J'OUVRE LES YEUX | DIR: LEYLA BOUZID | TUNISIA | 2015 | 102'

துனிசியாவின் கோடை காலம் 2010. புரட்சிக்கு சில மாதங்கள் முன்பு. 18 வயதான ஃபாரா படித்து முடிக்கிறாள். அவள் குடும்பத்தினர் அவளை மருத்துவராக வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் அவளுக்கோ தனது இசைக்குழுவின் மீது ஈடுபாடு. அதில் ஒருவனுடன் காதல். வாழ்க்கையை கொண்டாடுவது, குடிப்பது, இரவில் நகரத்தை சுற்றுவது என வாழ்ந்து வருகிறாள் ஃபாரா. அவளது தாய் ஹயத்துக்கு துனிசியாவும், அதில் நிறைந்துள்ள ஆபத்துகளும் தெரியும். அடக்குமுறை நிறைந்த தன் சமூகத்தையும், குடும்பத்தையும் ஃபாரா எப்படி எதிர்த்தாள்?

பகல் 12.00 மணி | AMETEUR TEENS | BORN DIGITAL | DIR: NIKLAUS HILBER | SWITZERLAND | 2015 | 92'

14 வயது பள்ளிச் சிறுவர்கள் குழு ஒன்று இணையத்துக்கு அடிமையாகிக் கிடக்கின்றது. அவர்களின் தினசரி வாழ்க்கையை சமூக ஊடகமே தீர்மானிக்கிறது. இணையம் வழியான பாலியல் மீறல்களும் நடக்கின்றன.

பிற்பகல் 2.15 மணி | NAKOM | NAKOM | DIR: T.W.PITTMAN & KELLY DANIELA NORRIS | GHANA | 2016 | 92'

தனது தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின், மருத்துவ மாணவனான இட்ரிஸு நகரத்திலிருக்கும் சுக வாழ்க்கையை விடுத்து தனது சொந்த விவசாய கிராமமான நகோமுக்கு செல்கிறான். நாம் தான் தற்போது குடும்பத்தின் தலைமை என உணரும் இட்ரிஸு, தனது அப்பா வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்கிறான். அவனது குடும்பத்தையே அழிக்கக்கூடிய வகையில் இருக்கும் அந்த கடனை அடைக்க முயற்சிக்கும் போது, அந்த அழகான கிராமத்தின் அழகையும், சோகத்தையும் தெரிந்து கொள்கிறான். நகரத்தில் தனக்கான எதிர்காலத்தை தேட வேண்டுமா, அல்லது தன் குடும்பத்தோடு சேர்த்து ஒட்டு மொத்த கிராமத்துக்காகவும் தனது எதிர்காலத்தை செலவிட வேண்டுமா என தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

மாலை 4.00 மணி | LOVE AND OTHER CATASTROPHES | DIR: SOFIE STOUGAARD | DENMARK | 2016 | 100'

லவ் அண்ட் அதர் டிசாஸ்டர்ஸ் என்ற படத்தில் ரோசா என்பவர் ஒரு வெற்றிகரமான உளவியல் நிபுணர். ஆனால் அனைவரையும், சூழலையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குணமுடையவர். இவரது நேர் எதிர் குணமுடைய பிரெடரிக் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். தோற்ற அளவில் அமைதியான வாழக்கைக்கு இடையில் தவறு ஒன்று குறுக்கிடுகிறது. ரோசாவின் கணவர் பிரெடெரிக்கின் கர்ப்பவதியான காதலி ரோசாவின் நோயாளியாக வருகிறார். இதனையடுத்து ஏற்படும் உறவுச்சிக்கலில் ‘நம் இருவருக்கும் சேர்ந்து வாழும் எதிர்காலம் உள்ளதா?’ என்ற கேள்வி எழுகிறது...

இரவு 7.00 | AFTERIMAGE | POWIDOKI | DIR: ANDRZEJ WAJDA | POLND | 2016 | 98'

1945ல் ஸ்டாலின் போலந்தை தனது பிடிக்குள் வந்திருந்தபொழுது புகழ்பெற்ற ஓவியர் வ்லாட்டுஸ்லா ஸ்ரெஸ்மின்ஸ்கி சமூக ரியலிச கோட்பாடுகளோடு தனது கலையை பொருத்திக்கொள்ள மறுக்கிறான். இதனால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். இறுதியாக அருங்காட்சியக சுவர்களில் வரையப்பட்ட அவரது ஓவியங்களும் அழிக்கப்படுகின்றன. சில மாணவர்களின் உதவியோடு கம்யூனிஸ்ட் கட்சிக்கெதிராகவும் அறிவுசார் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் கலைசார்ந்த எதிர்ப்புணர்வோடு போராடத் தொடங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

க்ரைம்

5 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்