சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.19 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.45 மணி | HATTRICK |  | DIR: RAMTIN LAVAFIPOUR  | IRAN | 2018 | 92'

ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியாக சென்ற தம்பதிகள் அங்கிருந்து திரும்பி வரும்போது அவர்தம் குடும்ப உறவுகள் சிக்கலான நிலைக்கு மாறிவிடுகிறது. விருந்து நிகழ்ச்சியின்போதே வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து ரகசியம் இருப்பது வெளிப்படுகிறது. முக்கியமாக பார்ஸாட், லிடா தம்பதியினருக்கிடையே இப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது. காரில் வரும்போது அவன் ஏதேதோ விளக்கம்சொல்ல முற்பட அவளோ அவன் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை. திருமணமான முன்னாள் காதலி ஒருத்தியுடன்தான் அவன் போனில் பேசிக்கொண்டிருந்தான் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு உளவியல் த்ரில்லராக இப்படம் கதை சொன்ன விதத்தில் நம்மை ஈர்த்துவிடுகிறது.

படத்தின் ட்ரெய்லர்

Hattrick

 

பகல் 12.15 மணி | PANIC ATTACK | DIR: PAWEL MASLONA | POLAND  | 2017 | 100'

சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல்களில் சிக்கும்போது நிகழும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை. அப்படி ஆறு நபர்களின் கதைகளின் தொகுப்பு தான் பேனிக் அட்டாக். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம். ரங்க ராட்டினமாய் சுழன்றடிக்கும் ஆறு கதைகள். ஓரிரவில் தன் இரு முன்னாள் காதலர்களைச் சந்திக்கும் ஒருத்தி,  விமானத்தில் மோசமான இருக்கைகளாலும், உடன் பயணிப்பவராலும் அவஸ்தைப்படும் ஒரு ஜோடி, தன்னை ஒரு நீலப்பட நாயகியாக தோழி வெளிக்காட்டிடுவாளோ என்ற பயத்தில் உறைந்திருக்கும் ஒரு சிறுமி, தன் கல்யாணத்தின் போது, பிரசவ வலி வந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் மணப்பெண் என வெவ்வேறு பின்புலத்தில் வெவ்வேறு மனிதர்களின் கதையை நகைச்சுவையும் சுவாரஸ்யமும் குறையாமல் தந்திருக்கிறார்கள்.  படத்தொகுப்புக்காகவும், கலகல காட்சிகளுக்காகவும் பயமின்றி பார்க்கலாம் பேனிக் அட்டாக்.

படத்தின் ட்ரெய்லர்

 

பிற்பகல் 2.45 மணி | WHAT WILL PEOPLE SAY / HVA VIL FOLK SI | DIR: IRAM HAQ | NORWAY | 2017 | 106'

பூத்துக் குலுங்கும் பதினாறு வயதுப் பெண் நிஷா. பூவின் நிழலாய் அவளது இரட்டை வாழ்க்கை இருக்கிறது. வீட்டில் அவள் சமர்த்தான பாகிஸ்தான் பெண். வெளியே நண்பர்களைப் பொறுத்தவரை சாதாரண நார்வே நாட்டு இளம்பெண். ஒருமுறை நிஷா தனது ஆண் தோழமையுடன் அவளது அறையில் இருக்கையில், நிஷாவின் தந்தை பார்த்துவிடுகிறார். என்னவாகும் நிஷாவின் கதி? என்ன செய்யும் அவளின் விதி? குடும்பம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் உணர்ச்சியுள்ள ஒரு கதை. இத்திரைப்படத்திற்கு 13 விருதுகள் கிடைத்துள்ளன. 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

படத்தின் ட்ரெய்லர்

 

மாலை 4.45 மணி | ORANGE DAYS | DIR: ARASH LAHOOTI | IRAN | 2018 | 102'

ஈரானின் வடபகுதியில் உள்ள ஆரஞ்சுத் தோட்டங்களில், சீஸனில் பெண்களை வேலைக்கு அழைத்துவரும் ஒப்பந்ததாரராக இருக்கிறார் அபன் என்ற 45 வயது பெண்மணி. தனது வேலையை சிறப்பாகச் செய்துவரும் அவர், அந்தப் பகுதியிலேயே மிகப்பெரிய ஆரஞ்சுத் தோட்டத்தின் டெண்டரை வெல்கிறார். அவரைச் சுற்றியுள்ள ஆண்கள் அவரின் டெண்டருக்குத் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 7.00 மணி | THE RIB | DIR: ZHANG WEI | CHINA | 2018 | 85'

மனமும் உடலும் முரண்பட்டு, இருப்பை நெருப்பாய் உணர்கிறான் ஹுயான்யு. ஆண் உடலில் பெண் மனம் தகிக்கிறது. மாறத் துடிக்கிறது. ஹுயான்யு பாலின மாற்றுக்கு தயாராக இருக்கிறான். ஆனால், அந்த சிகிச்சைக்கு அவன் தந்தையின் ஒப்புதல் வேண்டும். கத்தோலிக்க மதத்தைத் தீவிரமாக பின்பற்றும் தந்தையோ, பாலின மாற்றத்தை மகாபாவம் எனக் கருதுகிறார். என்ன செய்வான் ஹுயான்யு? பெண்ணாய் பாலின மாற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு தான் விரும்பியபடி பெண்ணாய் மாறினாளா ஹுயான்யு? இன்றைய சீன சமுதாயத்தில் எல்ஜிபிடி (LGBT - Lesbians-Gays-Bisexuals-Transgenders -  தன்பாலின சேர்க்கையாளர் / இருபாலின சேர்க்கையாளர் மற்றும் பாலின மாற்றம் செய்து கொண்டவர்கள்) எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறது இப்படம். பாலின மாற்றத்துக்குப் போராடும் கதாபாத்திரத்திற்கும் அவரது குடும்பத்துக்குமான உறவை, உரசலை, உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாக விளக்குகிறது 'தி ரிப்'.

படத்தின் ட்ரெய்லர்

THE RIB

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 mins ago

விளையாட்டு

11 mins ago

இந்தியா

15 mins ago

உலகம்

22 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்