இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம்: திருத்தியமைக்க சிங்கப்பூருடன் மீண்டும் பேச்சு- மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

By பிடிஐ

சிங்கப்பூருடன் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் (டிடிஏஏ) திருத்தம் செய்வது தொடர் பாக அந்நாட்டுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மொரீஷியஸுடனான ஒப்பந்தம் சமீபத்தில் திருத்தியமைக்கப் பட்டது. இதைப் போல சிங்கப் பூருடனும் பேச்சு நடத்தி திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இதற்கு எவ்வித கால வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.

பெண் பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாடிய ஜேட்லி, சிங்கப்பூருடனான ஒப்பந்த திருத்தம் விரைவில் நிறைவுபெறும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

மொரீஷியஸுடனான ஒப்பந்தத் தைத் தொடர்ந்து சிங்கப்பூருடனும் இதுபோன்ற ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. சிங்கப்பூருடனான ஒப்பந்த திருத்தம் நிறைவேற்று வதற்கான கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை.

இறையாண்மை மிக்க இரு நாடு களிடையிலான பேச்சு வார்த் தைக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. அதுவும் இதுபோன்ற வரி விதிப்பு சார்ந்த விஷயங்களில் நாமாக ஒரு தரப்பாக முடிவு செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி

எதிர்வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேறும் என நம்புவதாக ஜேட்லி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) அங்கம் வகிக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதில் ஒருமித்த கருத்து உருவா காவிடில், நாடாளுமன்ற வாக் கெடுப்பு முறையைத்தான் பின் பற்ற வேண்டியிருக்கும் என்று கூறினார். மக்களவையில் நிறை வேறிய ஜிஎஸ்டி மசோதா தற் போது மாநிலங்களவை ஒப்பு தலுக்காக காத்திருக்கிறது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

24 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்