உலகின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனம்: ஆப்பிளை முந்தியது ஆல்பபெட்

By செய்திப்பிரிவு

உலகின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 490 கோடி டாலராக உயர்ந்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் நிறுவனப்பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தன. இதனால் ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 56,800 கோடி டாலரா கவும், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53,500 கோடி டாலராகவும் உள்ளது. கூகுள் நிறு வனத்தின் விளம்பர வருமானம் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக ஆப்பிள் நிறுவனத் தின் சந்தை மதிப்பு 76,000 கோடி டாலர் வரை சென்றது. கடந்த 2010-ம் ஆண்டு ஒரு முறை கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை தாண்டியது. அப்போது இரு நிறுவனங்களும் 20,000 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாக இருந்தன. அப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன் இருந்தார். தவிர அப்போது ஐபேட் வெளியிட ஆப்பிள் தயாராக இருந்தது.

இப்போது ஆப்பிள் நிறுவனத் தின் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஐபோன்கள் மூலமாக வருகிறது. இது மிகப்பெரிய பிரச்சினை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கூகுள் நிறுவனம் 2004-ம் ஆண்டு பட்டியலிடப்பட்டது. எஸ்அண்ட்பி பட்டியலில் முதலி டத்தை பிடிக்கும் 12-வது நிறுவ னம் ஆல்பபெட் ஆகும். கடந்த காலங்களில் ஜெனரல் எலெக்ட்ரிக், ஜெனரல் மோட் டார்ஸ், ஐபிஎம், எக்ஸான் மொபில் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் முதலிடத்தில் இருந்தன.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 mins ago

விளையாட்டு

16 mins ago

இந்தியா

20 mins ago

உலகம்

27 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்