ரயில் டிக்கெட் விற்பனை செய்ய ஐசிஐசிஐ வங்கி திட்டம்

By பிடிஐ

ஐசிஐசிஐ வங்கி ரயில் டிக்கெட் விற்பனையில் இறங்க திட்டமிட்டுள்ளது. தனது இணையதளம் மூலம் ரயில்வே இ-டிக்கெடிங் சேவையில் இறங்க ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது இணையதளம் மற்றும் மொபைல் பேங்கிங் செயலி (ஆப்ஸ் மற்றும் பிரீபெய்ட் டிஜிட்டல் வாலட்டுகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

பயனாளர்கள் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவு செய்திருந்தால்தான் ரயில் டிக்கெட்டுகளை பெற முடிய வேண்டும். ஒரு முறை பதிவு செய்யும் இந்த வசதியை ஐசிஐசிஐ இணையதளமும் பயனாளர்களுக்கு வழங்கும்.

இந்த வசதியை பயன்படுத்த ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளில்லை. இதர வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் பரிமாற்ற வசதிகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி நிறுவனம் வேறு இணையதளம் மூலம் விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளது.

பயனாளர்கள் ரயில் சேவை விவரங்களை தேடுதல், இ-டிக்கெட் புக்கிங், முன்பதிவை ரத்து செய்தல் மற்றும் பிஎன்ஆர் நிலைமை அறிந்து கொள்வது போன்றவற்றையும் வங்கியின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஐசிஐசிஐ இணையதளம் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய ரயில் அட்டவணையையும் தெரிந்து கொள்ள முடியும்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

6 hours ago

கல்வி

8 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்