தற்சார்பு இந்தியா; வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்: தர்மேந்திர பிரதான்

By செய்திப்பிரிவு

எரிசக்தித் துறையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (அசோசாம்) நிறுவன வாரம் 2020-இல் இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தித் துறையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக இன்று பேசிய அவர், தற்சார்பு இந்தியா திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியக் குழுவினர் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நாட்டில் எரிசக்தி நியதி உறுதி செய்யப்படுவதுடன், எரிசக்தி பற்றாக்குறையும் நீங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் எரிசக்தித் துறை, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகவும், தொழில் துறைக்கு ஏதுவாகவும், அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியிலும், 5 ட்ரில்லியன் டாலர் அளவில் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் எரிசக்தித்துறை தொடர்ந்து முக்கியமான பங்கினை வகிக்கும் என்று அவர் கூறினார்.

“கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக எழுந்துள்ள சவால்களை நமது அரசு வாய்ப்புகளாகப் பயன்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டமான தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் நாம் முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். சந்தைப்படுத்துதலிலிருந்து உலக அளவில் தயாரிப்பு முனையமாக இந்தியாவை மாற்றும் முயற்சியில் ஏற்கனவே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் தொழில்துறை மற்றும் இதர பங்குதாரர்களுடன் நாம் இணைந்து வருகிறோம்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.

எரிசக்திப் பற்றாக்குறை உள்பட நாட்டில் ஏழ்மையை நீக்கும் வலுவான தீர்மானத்துடன் உலக அளவில் மிகப் பெரும் பொருளாதாரத்தை விரைவில் அடைந்துள்ள நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது என்று அவர் கூறினார். எரிசக்தி சேமிப்பை அதிகரிப்பதும், எரிசக்திப் பாதுகாப்பும் இதற்கு தேவையானவை என்று கூறிய அமைச்சர், “இவை இரண்டையும் நிலையான முறையில் மேற்கொள்வதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது”, என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

கருத்துப் பேழை

22 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

34 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்