ஆற்றல், திறமைகளை ஒருங்கிணைத்தால் அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா வசம் இருக்கும்: பிக்கி தலைவர் சங்கீதா கருத்து

By செய்திப்பிரிவு

பிக்கி அமைப்பின் தலைவர் சங்கீதா ரெட்டி நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று, அதன் பரவல் வேகம் மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடி என அனைத்தும் முற்றிலும் எதிர்பாராதது. இதுபோன்ற தொற்று பேரழிவை எதிர்கொள்ள எந்த முன் ஆய்வும் வழிமுறைகளும் நம்மிடம் இல்லை.

இந்தியா கரோனா தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பலனளித்துள்ளன. தற்போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த பொருளாதாரமும் மீண்டு வர ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாக வேளாண் துறையில் நெருக்கடி காலத்திலும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. உலகின் உணவுக் களஞ்சியமாக இந்தியா உருவாவதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது.

நம்முடைய ஆற்றல் மற்றும் திறமைகளை சரியான முறையில் ஒருங்கிணைத்தால் அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவின் வசம் இருக்கும்.

இவ்வாறு சங்கீதா ரெட்டி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்