159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

By செய்திப்பிரிவு

நடப்பு காரீப் காலத்தில் 159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காரீப் சந்தை காலம் 2020-21ல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழகம், உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து கடந்த 26ம் தேதி வரை, 159.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே காலத்தில் மொத்தம் 134.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் தற்போதைய நெல் கொள்முதல் 18.61% அதிகரித்துள்ளது. இந்தாண்டு மொத்த நெல் கொள்முதல் 159.55 லட்சம் மெட்ரிக் டன்னில், பஞ்சாப் மாநிலம் மட்டும் 107.81 லட்சம் மெட்ரிக் டன் பங்களிப்பை அளித்துள்ளது. இது மொத்த கொள்முதலில் 67.57%.

தற்போதைய காரிப் சந்தைக் காலத்தில் சுமார் 13.64 லட்சம் விவசாயிகள், ரூ.30,123.73 கோடி பணம் பெற்று ஏற்கெனவே பயனடைந்துள்ளனர்.

மேலும், மாநிலங்கள் விடுத்த வேண்டுகோள்படி, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 1247 விவசாயிகளிடமிருந்து கடந்த 26ம் தேதி வரை 1543.11 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து மற்றும் வேர்க்கடலையை ரூ.10.08 கோடி குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு முகமைகள் கொள்முதல் செய்துள்ளன.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேம் ஆகிய மாநிலங்களில் இருந்து கடந்த 26ம் தேதி வரை 76,512 விவசாயிகளிடமிருந்து 3,98,683 பருத்தி பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்