இந்தியாவில் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களை கண்டறிதல்: இந்தோனேசிய கூட்டு கூட்டத்தில் ஆலோசனை நடத்த முடிவு

By செய்திப்பிரிவு

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நிலக்கரிக்கான கூட்டு பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம் 2020 நவம்பர் 5 அன்று நடைபெறுகிறது.

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு புதுடெல்லியிலிருந்து இந்த காணொலி கூட்டத்தை இந்தியா நடத்துகிறது.

இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் வினோத் குமார் இந்திய தரப்பிலிருந்து இந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பார். இந்தோனேசிய தரப்பிலிருந்து இந்தோனேசிய குடியரசின் எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சகத்தின் கனிமங்கள் மற்றும் நிலக்கரி தலைமை இயக்குநர் ரித்வான் ஜமாலுதீன் தலைமை தாங்குவார்.

நிலக்கரி துறையில் இந்தியா செய்துள்ள சீர்திருத்தங்கள், வர்த்தக நிலக்கரி சுரங்கங்களை இந்தியாவில் கண்டறிதல், இந்தத் துறையில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் குறித்து இக்கூட்டம் கவனம் செலுத்தும்.

வர்த்தக வாய்ப்புகளை கண்டறிவதற்காக இரு நாடுகளின் தொழிற்சாலைகளுக்கிடையேயான கலந்துரையாடலும் நடைபெறும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்