ஒளிமின்னழுத்த தொழில்நுட்பம்; சூரிய ஒளி எரிசக்தியின் விலையை குறைக்க முடியும்: நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் தகவல்

By செய்திப்பிரிவு

ஒளிமின்னழுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி எரிசக்தியின் விலையை குறைக்க முடியும் என நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் எரிசக்திக்கான ஏலத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமும் சேர்க்கப்படும்: இந்தியா பிவி எட்ஜ் 2020இல் திரு ஆர் கே சிங், நமது பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவும், மின்சாரத்தை பசுமையாக மாற்றும் முயற்சியிலும் நாம் ஸ்திரமாக உள்ளோம்: திரு ஆர்கே சிங்

ஒளிமின்னழுத்த உற்பத்தி நிறுவனங்கள் முதன்மை வாய்ந்த உற்பத்தி துறையில் முதலீடு செய்ய வேண்டும்: டாக்டர் ராஜீவ்குமார், துணைத்தலைவர், நிதி ஆயோக்

ஒளிமின்னழுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி எரிசக்தியின் விலையை குறைக்க முடியும்: அமிதாப் கண்ட், தலைமை செயல் அதிகாரி ,நிதி ஆயோக்

நிதி ஆயோக், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா இணைந்து இந்தியா பிவி எட்ஜ் 2020 கருத்தரங்கை நடத்தின

பிவி என்று அழைக்கப்படும் ஒளிமின்னழுத்த உற்பத்தியை இந்தியாவில் பெருக்கவும், பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கவும், நிதி ஆயோக், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா இணைந்து நடத்திய இந்தியா பிவி எட்ஜ் 2020 என்ற சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், உலகெங்கிலுமுள்ள ஒளிமின்னழுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒன்றிணைந்து தங்கள் உபகரணங்கள் குறித்தும் இந்த தொழில்நுட்பம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். உலகெங்கிலும் இருந்து சுமார் 60 நிறுவன தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர். கே. சிங், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவும், மின்சாரத்தை பசுமையாக மாற்றும் முயற்சியிலும் அனைவரும் உறுதியாக உள்ளதாக கூறினார்.

எதிர்காலத்தில் எரிசக்திக்கான ஏலத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமும் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் பிரதமரின் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் தமது அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ்குமார்,ஒளிமின்னழுத்த உற்பத்தி நிறுவனங்கள் முதன்மை வாய்ந்த உற்பத்தி துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் பேசுகையில், ஒளிமின்னழுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி எரிசக்தியின் விலையை குறைக்க முடியும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்