ரூ.10 லட்சம் கோடியை நெருங்கிய சந்தை மதிப்பு: உலகின் 6-வது பெரிய எண்ணெய் நிறுவனமானது ரிலையன்ஸ்

By செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சமீப காலமாக அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

நேற்றைய வர்த்தகத்தில், அதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி அளவை தொட்டது. இது இத்தகைய சந்தை மதிப்பை எட்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற அதிகபட்ச சாதனை ஆகும். ரிலையன்ஸ் சந்தை மதிப்பு உயர்ந்ததன் மூலம் இந்த ஓராண்டு காலத்தில் அவருடைய சொத்து மதிப்பு 13.70 பில்லியன் டாலர் உயர்ந்து 58 பில்லியன் டாலராக உள்ளது.

அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மாவின் சொத்து மதிப்பைவிட இது அதிகம். இந்நிலையில் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்து உள்ளார். 110பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் முதல் இடத்திலும், 109 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் ஜெஃப் பிஸோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெருவாரியான வருவாய் எண்ணெய் விற்பனை மூலம்வருகிறது. பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான பிபி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 132 பில்லியன் டாலராக உள்ள நிலையில், ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 133 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் உலகளாவிய எண்ணெய் நிறுவனங்கள் வரிசையில் 6-வது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது.

நேற்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.47 சதவீதம் உயர்ந்து ரூ.1,547-க்கு விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்