வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி: வீட்டுக்கடன் வட்டி குறையும்

By செய்திப்பிரிவு

மும்பை

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான எஸ்பிஐயும், கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் இன்று ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5.40 சதவீதமாக ரெப்போ விகிதம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ரிவரஸ் ரெப்போ விகிதம் 5.14 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பல்வேறு கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.40 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக குறைத்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் அதன் பயனை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம். இதனால் உடனடியாக 15 சைபா என்ற அளவில் அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்