பிளிப்கார்ட்டை முந்தியது அமேசான்

By செய்திப்பிரிவு

அமேசான் நிறுவன இணையதளத்தை பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்நாப்டீல், பிளிப்கார்ட் ஆகிய இணையதளங்களைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை விட அமேசான் இணைய தளத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாதந்திர அளவில் பார்வையாளர்கள் அமேசான் நிறுவனத் துக்கு அதிகரித்துள்ளனர். இணையதள பகுபாய்வு புள்ளி விவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் டேட்டா இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அமேசான் இந்தியா தளத்துக்கு மே மாதத்தில் 2.36 கோடி பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.

பிளிப்கார்ட் தளத்துக்கு 2.35 கோடி பார்வையாளர்களும், ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 1.79 கோடி பார்வையாளர்களும் மே மாதத்தில் வருகைபுரிந்துள்ளனர்.

ஆண்டு வளர்ச்சி அடிப் படையில் ஒப்பிடும்போது மே 2014 வரை அமேசான் நிறுவனத்துக்கு 142 சதவீதம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு 80 சதவீத பார்வையாளர்களும். ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 90 சதவீத பார்வையாளர்களும் அதிகரித் துள்ளனர் என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் பிளிப் கார்ட் இணையதளத்துக்கு 1.30 கோடி பார்வையாளர்கள் வருகை இருந்தது. ஸ்நாப்டீல் மற்றும் அமேசான் நிறுவனங்கள் 1 கோடி பார்வையாளர்களுக்கு நெருக்கமாக இருந்தன.

இது குறித்து இ-காமர்ஸ் துறையினர் குறிப்பிடும்போது பொதுவான வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களை நோக்கி இழுக்க இணைய தளத்தின் முகப்பு பக்கமும், பார்வை யாளர்களுக்கு எளிதாக தேடும் வசதிகளை கொடுப்பதும் அளவுகோலாக உள்ளது என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்