இவரைத் தெரியுமா?- எரிக் வோல்சன்

By செய்திப்பிரிவு

லபார்ஜ் ஹோல்சிம் சிமென்ட் நிறுவனத்தின் செயல்பாட்டு துணைத் தலைவர். ஜூலை மாதத்துக்கு பிறகு இந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப் பேற்க உள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய சிமென்ட் நிறுவனமான லபார்ஜ் நிறுவனத்தில் 1999ல் முதன்மை துணைத் தலைவராக பணிக்குச் சேர்ந்தார். 2004ல் தலைமை நிதி அதிகாரியாக பொறுப் பேற்றார்.

இதற்கு முன் டிலோட் அண்ட் டச், பரிபாஸ், டிரினிட்டி அசோசியேட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

கொலராடோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்துறை சார்ந்த பட்ட படிப்பும், பாரீஸில் உள்ள ஹெச்இசி இன்டர்நேஷனல் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ படிப்பும் முடித்துள்ளார்.

நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் கையப்படுத்துவதில் வல்லவர். எகிப்து நிறுவனமான ஓரஸ்காம் சிமென்ட் நிறுவனத்தை 2007-ல் கையகப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

அமெரிக்கா தவிர, பிரான்ஸ், பிரேஸில், எகிப்து நாடுகளில் இந்நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன. மனிதவளம் மற்றும் நிதித் துறைகளை இவரே வழிநடத்தவும் செய்கிறார்.

அமெரிக்க மற்றும் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர். குழுவை வழிநடத்துவதிலும், செயல்படுத்துவதிலும் வல்லவர். நிதிச் சந்தையை புரிந்துகொண்டு செயல்படக் கூடியவர் என பெயரெடுத்தவர்.

செயல்பாட்டு தலைவராக இருப்பது மட்டும் என்னுடைய வேலையல்ல, நான் ஒருங்கிணைப்பு கலாசாரத்தையும் உருவாக்க விரும்புகிறேன் என்று கூறுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்