மேரு கேப்ஸ் ரூ.625 கோடி திரட்ட திட்டம்

By செய்திப்பிரிவு

மேரு கேப்ஸ் நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக 625 கோடி ரூபாய் (10 கோடி டாலர்) திரட்ட திட்டமிட்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இந்த நடவடிக்கையை மேரு கேப்ஸ் மேற்கொள்ள உள்ளது. ஹாங்காங்க் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஹெட்ஜ் பண்ட் மற்றும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களில் இருந்து நிதியை திரட்ட முடிவு செய்திருக்கிறது.

தற்போதைய முதலீட்டா ளர்களிடம் ஏற்கெனவே 5 கோடி டாலர் திரட்டி இருக்கி றோம். இப்போது மேலும் 10 கோடி டாலரை திரட்ட திட்டமிட் டிருக்கிறோம் என்று மேரு கேப்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சித்தார்த்தா பஹ்வா தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கை அடுத்த மாதத்துக்குள் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இந்த நிறுவனம் 20 நகரங்களில் 15000 வாகனங்களுடன் செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 40 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது.

புதிய வாடிக்கையாளர்களை கவர, ஆட்டோவில் செல் பவர்களை கார்களில் செல்ல வைக்க, புதிய நகரங்களில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார்.

2006-ம் ஆண்டு மேரு கேப்ஸ் செயல்படத் தொடங்கியது. அதிலிருந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறோம்.

இன்னும் மூன்று முதல் நான்கு வருடங்களில் 1 லட்சம் வாகனங்களை எங்களது நெட்வொர்க்கில் இணைத்திருப் போம் என்று சித்தார்த்த பஹ்வா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்