எச்எஸ்பிசி வங்கியில் இந்தியர்கள் கருப்பு பணம்: மேலும் 100 பேர் மீது வழக்கு தொடர ஐடி துறை முடிவு

By செய்திப்பிரிவு

ஜெனிவாவில் உள்ள எச்எஸ் பிசி வங்கிக் கிளைகளில் கருப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு மத்திய அரசுக்கு வழங்கியது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 628 தனி நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இந்த 628 பேரில் 200 பேரின் முகவரியை கண்டுபிடிக்க முடிய வில்லை அல்லது அவர்கள் வெளி நாடுகளில் வசிக்கலாம் என தெரியவந்துள்ளது.

மீதம் உள்ள 428 வங்கிக் கணக்கில் ரூ.4,500 கோடி இருப்பு இருந்தது தெரியவந்தது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் 128 பேரின் கணக்குகள் மதிப்பீடு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.3,150 கோடி வரி வசூ லிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 240 பேரின் கணக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வருமான வரித் துறை திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம் வரி மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.3,200 கோடி அரசுக்கு கிடைக்கும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 31-ம் தேதிக்குள் விசார ணையை முடிக்க எஸ்ஐடிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்த விசார ணையை விரை வுபடுத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

2 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

16 mins ago

வலைஞர் பக்கம்

20 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

38 mins ago

க்ரைம்

35 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்