இயற்கை விவசாயம் வேகமாகவளர்ச்சி அடைந்து வருகிறது: ஃபிக்கி விழாவில் ராஜசேகர் ரெட்டி கருத்து

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இயற்கை விவசாயம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் இயற்கை வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருவதாக ஸ்ரெஸ்டா நேச்சுரல் பயோபுராடெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி சீலம் தெரிவித்தார்.

சென்னையில் இயற்கை வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கத்தை ஃபிக்கி எப்எல்ஓ அமைப்பு நடத்தியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜசேகர ரெட்டி சீலம் பேசியதாவது: தற்போது நாம் சாப்பிடும் உணவில் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் நம் உடம்பு ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு உணவுகளில் உரங்களில் அளவு அதிகரித்து விடும். இதைத் தடுக்க ஒரே வழி இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது.

தற்போது இயற்கை வேளாண்மை சார்ந்த தொழில் கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்தியாவில் இயற்கை விவசாய பொருட்களுக்கு 500 கோடி டாலர் வரை வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தத்துறை மிக அதிகமான வளர்ச்சியை எட்டும் என்று ராஜசேகர ரெட்டி சீலம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்