5.5 சதவீத வளர்ச்சி: ரங்கராஜன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்தார்.

வேளாண் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றால் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதத்தை எட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். நான்காம் காலாண்டு முடியும் வரை காத்திருங்கள். வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதத்தை விட 5.7 சதவீத அளவுக்கு உயருமே தவிர, குறையாது என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் கூறியது: நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் விவசாயத்துறையில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியை எட்டுவது சாத்தியமே. உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குறிப் பிடத்தக்க வளர்ச்சி எட்டப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீத மாக இருந்தது. மூன்று காலாண்டுகளில் எட்டப்டப்ட வளர்ச்சியின் அடிப் படையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதத்தை எட்டும் என மத்திய புள்ளியியல்துறை கணித்துள்ளது. நான்காம் காலாண்டில் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற அளவு வளர்ச்சி எட்டப்படுமாயின் அடுத்த நிதி ஆண்டில் (2014-15) நமது வளர்ச்சி 6 சதவீதத்தை எட்டும் என்று ரங்கராஜன் கூறினார்.

பணவீக்கம் குறைந்துவரும் நிலையில் அடுத்து வரும் காலாண்டு நிதிக் கொள்கை வெளியீட்டின்போது கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா என்று கேட்டதற்கு, ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் 8 சதவீதம் என்பது மிகவும் அதிகமானது.

இருப்பினும் பணவீக்கம் குறையும் என்றும், இதைத் தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும் ரங்கராஜன் கூறினார். பிப்ரவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவாக 8.1 சதவீத அளவுக்குக் குறைந்தது. ஒட்டுமொத்த பணவீக்கம் 4.68 சதவீதமாகக் குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

41 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்